விக்‌னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ’தனா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள்து.

surya thana sernthu kootam

இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்தந்தும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை விறுவிறுப்பாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்  இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

சூர்யா இந்த படம் முடியும் தருணத்தில் இருப்பதால் சூர்யா அடுத்த படம் பூஜை போட்டுள்ளார்.

priya

`மேயாத மான்’ படத்தை தொடர்ந்து டி.வி நடிகை நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

priya

நடிகர் சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத மான் படத்தில் நடித்த ப்ரியா பவானி ஷங்கரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதனை ப்ரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே கோகுல் இயக்கத்தில் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கார்த்தி ஜோடியாக இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவலால் இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.