தமிழ் சினிமாவில் வெகுவேகமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கடந்த சில நாட்களாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் மல்லுக் கட்டி வருகிறார்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்த போது இருந்த ரசிகர் பட்டாளத்தை கொண்டு அப்படியே மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரியா பவானி சங்கர் நடிப்பில் மட்டும் கிட்டதட்ட பத்து படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சிறிய நடிகர்கள் பெரிய நடிகர்கள் என்ற எந்த பாரபட்சமும் பார்க்காமல் இருப்பதால் ப்ரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பிரியா பவானி சங்கர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். அப்போது ஜர்னலிஸ்ட் ஆக அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் தன்னுடைய சேனலில் பேசியுள்ளார். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டார் பிரியா பவானி சங்கர். ஆனால் அது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை போல.
தொடர்ந்து பிரியா பவானி சங்கரை டார்கெட் செய்து சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். அதிலும் ஒரு ரசிகர் ஒரு படி மேல் போய், அடுத்த 5 வருடத்தில் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் போன்ற தயாரிப்புகளில் நடிக்க வேண்டும் அல்லவா, அதற்காக இப்படியெல்லாம் செய்துதானே ஆகவேண்டும் என கிண்டல் செய்துள்ளார்.
அதைப் பார்த்த பிரியா பவானி சங்கர், ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy என பதிலுக்கு கிண்டலடித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
