Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் அமைதியாக தான் இருந்தேன், எஸ் ஜே சூர்யா தான் அவசரப்பட்டு உளறி விட்டார்.. உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்
சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா உலகமே பரபரப்பாக பேசிக் கொண்டது பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவருக்கும் காதல் என்ற வதந்தியை பற்றித்தான். இருவரும் தொடர்ந்து நடித்ததால் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த கிசுகிசு.
அதனால்தான் பிரியா பவானி சங்கர் தன்னுடைய உண்மை காதலரை உலகுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விட்டார். அதுமட்டுமல்லாமல் விரைவில் அந்த காதலரை திருமணம் செய்து கொள்வேன் எனவும் அறிவித்து விட்டார்.
இது சம்பந்தமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். அதை அப்படியே சினிமாவாக எடுத்துக் கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் அதற்கு பதில் அளித்துவிட்டால் அதுவே பெரிய செய்தியாக மாறிவிடும். அப்படி எஸ் ஜே சூர்யா கொஞ்சமும் யோசிக்காமல் என்னையும் அவரையும் பற்றி வெளிவந்த கிசுகிசுக்களுக்கு நேரடியாக பதில் அளித்ததால் அது தலைப்புச்செய்தி ரேஞ்சுக்கு மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
அவருடைய ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு நல்ல நடிகனாகவும் நல்ல மனிதராகவும் தன்னை முன்னிறுத்தி வருகிறார். அவருடைய படங்கள் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
