fbpx
Connect with us

பார்பி டால் போல் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. இத பாக்க ரெண்டு கண்ணு பத்தலையே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்பி டால் போல் போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. இத பாக்க ரெண்டு கண்ணு பத்தலையே!

தமிழ் திரையுலகில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர்  கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் தான் பிரியா பவானி சங்கர். இந்தத் தொடரின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே தனக்கென சொந்தமாக்கிக் கொண்டார் பிரியா.

இதனைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது பிஸியான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

மேலும் தற்போது இவரது நடிப்பில் ‘ஓ மண பெண்ணே’, ‘குருதியாட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டு தீ போல் பரவி, பல ரசிகர்களை உருக வைத்துள்ளது.

அதாவது தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் பலர் பண்டிகை காலம் என்றாலே விதவிதமாக போட்டோக்களை எடுத்து அவற்றை தங்களது சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்தவகையில், ப்ரியா பவானி சங்கர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற உடையில் பார்பி டால் போல் ஜொலி ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

priya-bhjavani-shankar-1

priya-bhjavani-shankar-1

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

priya-bhjavani-shankar-2

priya-bhjavani-shankar-2

Continue Reading
To Top