ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நயன்தாரா போல ஆகிடலாம் என பறப்பதற்கு ஆசைப்படும் ப்ரியா பவானி சங்கர்.. கடுப்பாகும் தயாரிப்பாளர்கள்

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவருடைய கால்ஷூட் நிறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி பல படங்களில் பிசியாக இருந்தாலும் ஒரு படத்தின் பிரமோஷனில் கூட நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார்.

இவரின் சொந்த தயாரிப்பில் உருவாகும் படங்களின் ப்ரோமோஷனில் மட்டும்தான் இவர் கலந்து கொள்வார். உதாரணத்திற்கு நெற்றிக்கண் திரைப்படத்தை இவரின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படத்தில் பிரமோஷனுக்காக நயன்தாரா நிறைய மெனக்கெட்டார்.

ஆனால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களை பற்றி அவர் கவலைப்படுவது கிடையாது. இது திரையுலகில் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது இவரை போன்றே நடிகை பிரியா பவானி சங்கரும் பட ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறாராம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் இவர் தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷனில் நித்யா மேனன், ராசி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் ப்ரியா பவானி சங்கர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் நித்யா மேனன் காலில் அடிபட்டிருந்த நிலையில் கூட வீல்சேரில் வந்து கலந்து கொண்டுள்ளார்.

அப்படி இருக்கும்போது பிரியா பவானி சங்கர் மட்டும் இதில் கலந்து கொள்ளாதது தயாரிப்பாளரை கடுப்பாக்கியுள்ளது. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் நயன்தாரா ரேஞ்சுக்கு இவ்வளவு பந்தா காட்டுவது சில விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் இவருடைய மார்க்கெட் அதோகதி தான் என்று தற்போது இவரை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News