Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிங்கப் பெண்ணாக மாறிய பிரியா.. பச்சைக்கொடி காட்டியும் குழப்பத்தில் அட்லி
வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கி அந்த 4 படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முன்னாடி சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் என்றால் அது அட்லி தான். அட்லி இயக்கிய 4 படங்களில் 3 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அட்லியின் மனைவி பிரியா, யோகா என்ற பெயரில் அந்தரத்தில் பறந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆனது.
திருமணத்திற்கு முன்பு படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரியா அட்லி திருமணம் ஆன பின் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டார். தற்போது திருமணமான நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருப்பதால் இவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.
இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிப்பதற்காக நண்பர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், அட்லியும் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதால் விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கிய குறும் படங்களில் படித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே, அப்போதுதான் அட்லி மீது காதல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீயின் பிகில் படத்தில் சிங்கப் பெண்ணே என பாட்டு வைத்ததன் விளைவு தற்போது பிரியா அட்லி படத்தில் நடிப்பேன் என்று தலைகீழாக நிற்கிறாராம்.
திறமையான பெண்களை வீட்டிற்குள் மறைத்துக் கொள்வது மூடத்தனம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அட்லியின் கிரீன் சிக்னலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
