fbpx
Connect with us

என்னை விட்டுவிடுங்கள்! கண்ணீரில் பிரியா ஆனந்த்..

priya anand

News / செய்திகள்

என்னை விட்டுவிடுங்கள்! கண்ணீரில் பிரியா ஆனந்த்..

வாமனன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது வெளியாகியிருக்கும் கூட்டத்தில் ஒருத்தன் பட பத்திகையாளர் சந்திப்பில், நான் சினிமாவே வேண்டாம் முடிவு செய்திருந்தேன், என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோக சம்பவம் நடந்துவிட்டது என்று சொன்னார்.

அதுகுறித்து மேலும் கேட்டபோது, சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு தம்பிபோல் ஒரு நண்பன் இருந்தான். அவன் தான் என்னுடைய முதல் ரசிகன்.

நான் அவன் வீட்டில்தான் தங்கியிருந்தேன். அடுத்த ஜென்மமென்று ஒன்று இருந்தால் அவன் என் தாய் வயிற்றில் பிறந்து எனக்கு தம்பியாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன். அவனை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அவன் ஒரு விபத்தில் இறந்து விட்டான். அந்த சோகத்திலிருந்து மீள முடியவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலகி இருக்கலாமென்று முடிவெடுத்தேன்.

அந்த நேரத்தில் தான் இயக்குநர் ஞானவேல் கூட்டத்தில் ஒருத்தன் கதையோடு வந்தார். அவரிடம் நான் கதைக் கேட்கக் கூட தயாரக இல்லை. ஆனால் என்னை வற்புறுத்தி நீங்கள் கதையைக் கேளுங்கள், பிறகு முடிவு செய்யுங்கள் என்று சொன்னார்.

கதையைக் கேட்ட பிறகுதான் நேற்றைவிட ஒருபடி உயர்ந்திருந்தால் அது வாழ்க்கை, நான் ஜெயித்துக் காட்டுவதுதான் என்னுடன் இருப்பவர்களுக்குச் செய்யும் மரியாதை என்பது புரிந்தது. அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்தேன் என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top