Connect with us

Cinemapettai

எனக்கு அந்த நடிகர் படம்னா டபுள் ஓகே.. இரண்டாவது முறையாக ஜோடி போடும் பிரியா ஆனந்த்

priya-anand-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்கு அந்த நடிகர் படம்னா டபுள் ஓகே.. இரண்டாவது முறையாக ஜோடி போடும் பிரியா ஆனந்த்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தாலும் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கிறார் பிரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரியா ஆனந்த் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனாலேயே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு தாவிக் கொண்டே இருந்தார்.

வயதும் தற்போது 34 ஆகிவிட்டதால் இனிமேலும் முன்னணி நடிகையாக வலம் வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்பதால் கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த எல்கேஜி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ப்ரியா ஆனந்த்.

அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படமொன்றில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் பிரியா ஆனந்த் ஆர் ஜே பாலாஜி படம் என்றால் எனக்கு டபுள் ஓகே தான் என பச்சை கொடி காட்டி விட்டாராம்.

priya-anand-rj-balaji-cinemapettai

priya-anand-rj-balaji-cinemapettai

ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர் ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணை இயக்குனராக இருந்த சரவணன் என்பவர் மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க உள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top