அந்தரங்க டார்சரை தாண்டி ஜானி மாஸ்டர் செய்த மட்டமான வேலை.. லீக் ஆன லெட்டர், அதிர்ச்சியான திரையுலகம்

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்,வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் ஜானி, தெலுங்கு திரைத்துறையிலும் பிரபல நடன இயக்குநராக திகழ்கிறார். இவர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் அந்தரங்க புகார் அளித்தார். அதில், ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி தன்னை உடல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார் என்று பகீர் கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது, ஜானி மாஸ்டரால் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்ட ஒரு சில விஷயங்கள், மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“எனக்கு 19 வயது இருக்கும்போது அசிஸ்டன்ட் கோரியோகிராஃபராக ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்தேன். வேலை விஷயமாக முதல் முறையாக மும்பைக்கு சென்றபோது, அங்கு உள்ள ஹோட்டல் ரூமில் வைத்து என்னிடம் அத்துமீறினார். நான் தடுத்தபோது என்னை பலவந்த படுத்தினார்.

மேலும் இதை நான் வெளியில் சொன்னால், வேலையை விட்டு fire செய்துவிடுவேன், மேலும் இண்டஸ்ட்ரியில் வேறு எங்கும் வேலைகிடைக்காத ஒரு நிலையை உனக்கு ஏற்படுத்துவேன் என்று மிரட்டினார். அன்று மட்டுமல்ல, பல முறை ஷூட்டிங் சென்ற இடத்தில் தவறாக எல்லார் முன்னாடி வைத்தும் தொடுவார்.

கேரவன்-க்கு வந்து அடிக்கடி, அவருக்கு தேவையானவற்றை என்னை செய்துவிட சொல்லுவார். ஒரு முறை மறுத்தபோது, என் தலையை பிடித்து கண்ணாடியில் மோத செய்து, அடித்து துன்புறுத்தினார். பல இரவுகள், என் வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தொல்லை செய்துள்ளார்.

அவர் மட்டுமல்ல அவர் மனைவியும் இதில் உடைந்ததையாக தான் இருந்தார். அவர்கள் என்னை மதம் மாற்ற முயற்சி செய்தார்கள். மதம் மாற முடியாது என்று கூறியபோது, என் கணத்தில் அவர் மனைவி அறைந்தார். இப்படி பல கொடுமைகளை இத்தனை வருடங்களாக நான் அனுபவித்து வந்துள்ளேன்.” இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர் ஜானி மாஸ்டர் மற்றும் அவர் மனைவி.

மேலும் அந்தரங்க தொல்லைக்கு ஆளானால் புகாரளித்த பெண் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜானி மாஸ்டர் மீது தொடரப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டால், தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாரை நம்புவது என்றே தெரியவில்லை.

- Advertisement -spot_img

Trending News