மலையாள சூப்பர்ஸ்டார் பிரித்விராஜ் ,சுப்ரியா மேனன் தம்பதியினர்க்கு, செப்டம்பர் 8, 2014 அன்று பெண் குழந்தை பிறந்தது. ‘அலங்கரித்தா’ என்று பெயரிட்டார் . பின் முன்னணி நாளிதழ் ஒன்றிற்காக போட்டோ ஷூட்டும்  நடத்தினார்.

பின்னர் என்ன நினைத்தாரோ தன் மகளின் பிரைவசி கெடக்கூடாது என்று , மீடியாவின் பார்வையில் இருந்து அவரை மறித்து விட்டார் .

தன் மகளின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அப்லோட் செய்யும் பொழுது கூட அவளின் முகம் தெளிவாக தெரியாத விதமாக பார்த்துக்கொண்டார் . தன் மகளின் குழந்தைப்பருவம் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சியை பார்த்து மலையாள திரையுலகமே ஆச்சிர்யப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது தன் மகளின் மூன்றாவது பிறந்த நாள் அன்று தன் ட்விட்டர் பக்கத்தில் அவளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவரின் ரசிகர்கள் மற்றும் மலையாள  திரை உலகத்தினர் இந்த போட்டோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.