Reviews | விமர்சனங்கள்
பிரித்விராஜ், அதிதி பாலன் துப்பறியும் திரில்லர் ஹாரர்.. கோல்ட் கேஸ் விமர்சனம்
அறிமுக இயக்குனர் தனு பாலக் இயக்கத்தில் பிரித்விராஜ், அதிதிபாலன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பில் அமேசான் ப்ரைம் தலத்தில் ஜூன் 30 வெளியான படம் COLD CASE . ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரொஜெக்ட். ஹாரர், திரில்லர், துப்பறியும் நாவல் போன்ற கதைக்களம்.
கதை – மீன் பிடிப்பவரின் வலையில் பிளாஸ்டிக் கவரில் மண்டை ஓடு கிடைக்கிறது. இந்த கேஸை துப்பறியும் போலீசாக பிரித்விராஜ் சுகுமாரன். மண்டை ஓடு, அந்த பல் என பாரன்சிக் டிபார்ட்மெண்ட் துணையுடன் அந்த நபர் பெண் என்றும், இறந்து ஒரு வருடம் இருக்கும் என்ற நோக்குடன் பயணிக்கிறது கேஸ்.
மறுபுறம் விவாகரத்து பெறப்போகும் ஒரு குழந்தையின் தாயாக அதிதி. டிவி துறையில் வேலை பார்க்கிறார். புதிய வாடகை வீட்டில் மகளுடன் நுழைகிறாள். அங்கு பிரிட்ஜ் உள்ளே அமானுஷ்யம் உள்ளதை உணர்கிறாள். அந்த ஆத்மாவிற்கு உதவ ஒரு புறம் அமானுஷ்யங்களை நன்கு அறிந்த நபரின் உதவியை நாடுகிறார், பின்னர் தனது இன்வெஸ்டிகேஷன் வேலைகளை செய்கிறார்.

cold case
ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் தனித்தனியே அந்த இறந்த நபரை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். ஹீரோவை பொறுத்தவரை சாட்சி தேடுகிறார், ஹீரோயின் அந்த ஆத்மாவை திருப்த்தி படுத்த நினைக்கிறார்.
ஹீரோ மற்றும் ஹீரோயின் சந்திக்கும் காட்சியில் அந்த பெண்ணை கொன்றது, ஒரு பெண் என்பதை பற்றி பேசுகின்றனர். இறுதியில் கொலையாளி யார் என்பதனை கிளைமேக்ஸ்சாக நமக்கும் சொல்கின்றனர்.
சினிமாபேட்டை அலசல் – கொரானா சூழல் காலகட்டத்தில் கதைக்களம், ஆனால் யாருமே மாஸ்க் போடவில்லை, இப்படி ஆரம்பித்து பல லாஜிக் ஓட்டைகள் உள்ளது. ஹீரோவுக்கு தமிழ்நாடு டாக்டர், போலீஸ் உதுவுவது, ஹீரோவே பல ட்விஸ்ட் முடிச்சுகளை தானே அவிழ்ப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம். தன் குழந்தை, வேலை என இரண்டையும் சமாளிக்க நேரம் இல்லை, எனினும் துப்பறிய கிளம்புகிறார் ஹீரோயின். சில பல லாஜிக் குறைகளை அதிகம் பெரிதாக யோசிக்காமல், படத்தை பார்க்கும் பட்சத்தில் பெரிய ஏமாற்றத்தை தராது.
பிரித்விராஜ் போலீஸ் என சந்தோஷப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். நடிக்க அதிக ஸ்கோப் இல்லை. திகில் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சூப்பர் கதையாகவே இருப்பினும், பட்ஜெட், மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஒரு முறை பார்க்க கூடிய டீசண்ட் திரில்லர் இது.
சினிமாபேட்டை ரேட்டிங்- 3/5
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
