பிருத்விராஜ் சுகுமாரன்

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ. சினிமா பிண்ணனி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தாலோ என்னவோ, சினிமா என்ட்ரி ஈஸியாக இவருக்கு அமைந்தது. எனினும் கடின உழைப்பு, விட முயற்ச்சியின் காரணமாக இந்த நிலையை அடைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். சில படங்களில் பாடலும் பாடியுள்ளார். சில வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார். அந்த பாணரில் சில படங்களுக்கு இணை தயாரிப்பும் செய்துள்ளார்.

சில காலங்களாக வேற்று மொழிகளில் அதிக கவனம் செலுத்திய பிரித்விராஜ் , தற்பொழுது முழு வீச்சில் மீண்டும் மலையாள சினிமாவில் போகஸ் செய்கிறார். ‘மை ஸ்டோரி, ரணம், ஆடுஜீவிதம், காளியன்’ மற்றும் இயக்குநர் அஞ்சலி மேனன் படம் என பல படங்களில் நடிக்க உள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்தியா வந்த காதலன். ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.

சோனி பிக்ச்சர்ஸ்

சில நாட்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்ச்சர்ஸ் என்டேர்டைன்மெண்ட் உடன் இணைத்து இவர் படத்தை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. சோனி பிக்ச்சர்ஸ் இந்தியா மற்றும் ப்ரிதிவிராஜின் மனைவி சுப்ரியா துவங்கியுள்ள பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தறிக்கும் படத்திற்கு 9 என தலைப்பு வைத்துள்ளனர். ஷான் ரஹ்மான், சேகர் மேனன் இசையமைக்கவுள்ளார்கள் , அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஷமீர் முஹமத் எடிட்டிங். ஜென்யுஸ் முஹமத் படத்தை இயக்குகிறார்.

அதிகம் படித்தவை:  வினுச்சக்கரவர்த்தியின் மகள் உருக்கமான பேச்சு


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரை பார்க்கும் பொழுது இது சயின்ஸ் பிக்ஷன், பீரியட் ட்ராமா படமாக இருக்கும் என தோன்றுகிறது.