மலையாள சூப்பர் ஸ்டார் ப்ரித்வி ராஜ் சுகுமாரன் சரித்திர படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் பெயர் காளியன். இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசரை நேற்று இரவு அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

prithiviraj

காளியான்

மலையாளத்தில் ‘விமானம்’ என்ற படத்தின் ரிலீசுக்கு பின் மை ஸ்டோரி, ஆடுஜீவிதம், லூஸிபிர் போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இப்படங்கள் முடிந்ததும் அவர் நடிக்கும் சரித்திர பீரியட் ட்ராமா படம் தான் காளியான்.

“வரலாறு அவனை மறந்துவிட்டது. எனினும் கதைப்பாடல்களில் அவன் புகழ் பாடுவர். பெரிய சாம்ராஜ்யத்தை தன் தன்னம்பிக்கையால் தனித்து போரிட்டவன். ” என்று டீவீட்டியுள்ளார்.

இதனை ‘மேஜிக் மூன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. எஸ்.மகேஷ் என்பவர் இயக்கவுள்ள இப்படத்தின் ஸ்க்ரிப்டை பி.டி.அணில் குமார் எழுதியுள்ளார். ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைக்கவுள்ளார்கள். மேலும் நம் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

kaaliyan flp

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில் ஷூட்டிங் தொடங்குமாம். இப்படத்தின் ப்ரீ ப்ரோடுக்காஷன் பணிகள் நடந்து வருகின்றதாம். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் பிற டெக்னீஷியன் தேர்வு நடைபெற்று வருகின்றதாம்.

படத்தின் மோஷன் போஸ்டரில் பிரித்விராஜ் நெடிய முடி, தாடி என்று மருதநாயகம் கமல் போன்ற லுக்கில் உள்ளார்.

படத்தின் கதை

இப்படம் வேணாடு சாம்ராஜ்யத்தின் ” இறைவி குட்டி பிள்ளை” என்ற மந்திரியின் வாழக்கை பற்றிய படம் என்று கிசு கிசுக்கப்பட்டுகிறது. இவர் நாகர்கோவில் அருகில் மதுரை படையுடன் போரிட்டது பற்றி வில்லுப்பாட்டு பாடல் உள்ளது . அதனை அடிப்படையாக கொண்டே படத்தின் கதை ரெடியாகி உள்ளதாம்.

prithiviraj

இவரின் வீரம் மற்றும் இவரை அடைந்த புகழின் மேல் பொறாமை கொண்ட சில வீரர்கள் செய்யும் துரோகத்தால்  அந்த சண்டையில் வீர மரணம் அடைவாராம்.