fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வேற லெவல் ஆக்ஷன் திரில்லர்.. பிரித்விராஜின் குருதி விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

வேற லெவல் ஆக்ஷன் திரில்லர்.. பிரித்விராஜின் குருதி விமர்சனம்

பிரித்விராஜ் தயாரித்து வில்லன் வேடத்தில் நடித்துள்ள படம் தான் குருதி. ரோஷன் ஆன்ட்ரயூஸ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மனு வாரியர் இயக்கியுள்ள இப்படம், மதம் என்பது ஒவ்வொரு பார்வையில் எப்படி உள்ளது என்பதனை காமிக்கிறது.

நம் ஊரில் நடக்கும் சாதாரண மத சண்டை தான், எனினும் ஹாலிவுட் பட ஸ்டைலில் கொடுக்க முயற்சி செய்துள்ளனர் இந்த டீம். அனிஷ் எழுதிய கதைக்கு, அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.

கதை – போலீஸ் ஒருவர் லோக்கல் கலவரத்தில் வயதான முஸ்லீம் முதியவரை கொன்றவனை அழைத்து வந்து ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறார். இப்ராஹிம் (ரோஷன்) அவன் தம்பி மற்றும் அப்பா வசிக்கும் வீடு. உணவை கொடுக்க சுமதி வருகிறாள். அவர்களுக்குள் பேசும் விஷயங்களை நாம் பார்க்கிரோம்.

அந்த வீட்டிற்கு தன் அப்பாவை கொலை செய்தவனை பழி தீர்க்க தன் கூட்டாளியுடன் வருகிறான் லாயிக் (பிரித்விராஜ்). இந்த நபர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டம், அவர்களின் மதவாத சிந்தனைகள், சூழல்கள் என திரைக்கதை நகர்கிறது.

kuruthi

சினிமாபேட்டை அலசல் – இது சோஷியல் மெஸேஜ் சொல்லும் திரில்லர் ஜானர் படம். நிதானமாக ஆரம்பிக்கும் படம் தனி மனிதனின் கோபம், சிந்தனை, பழக்கவக்கம் என பலவற்றை சுற்றி நகர்கிறது. கதாபாத்திரங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை பற்றி நன்கு ஆராய்ந்து தெளிவாக எழுதியுள்ளார் அனிஷ்.

இசை, ஒளிப்பதிவு, நடிப்பும் என அனைத்துமே பிளஸ் தான். மலையாள சினிமாவில் மட்டும் தான் இது போன்ற முயற்சி கட்டாயம் வெற்றி பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – வீக்கெண்ட் முன்னிட்டு பொழுதை கழிக்க ஏற்ற படம் இந்த குருதி.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top