நன்றிக்கடனை தீர்க்க போராடும் பிரித்விராஜ்! மீண்டும் உயிரோட்டம் பெறவுள்ள இறந்த சூப்பர் ஹிட் இயக்குனரின் படம்

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனராகவும் கதாசிரியராகவும்  இருந்தவர் கே.ஆர். சச்சிதானந்தன் என்னும் சாச்சி. இவர் இந்திய திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்னும் பன்முகத் திறமையை வெளிப்படுத்தி பணியாற்றினார்.

மலையாள சினிமாவில் ‘அனார்கலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சாச்சி. இவர் கடைசியாக இயக்கிய படம் அய்யப்பனும் கோஷியும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென இயக்குனர் சாச்சி காலமானார்.

சாச்சி ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தொடர்ந்து பிருத்திவி ராஜ்க்கு மற்றொரு கதையை உருவாக்கி அதை அறிமுக இயக்குனரான ஜெய நம்பியாரை வைத்து இயக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தாராம்.

சாச்சியின் மரணம், கொரோனாவின் தாக்கம் மற்றும் ஊரடங்கு என பல காரணங்களுக்காக அந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

தற்போது ஜெயம் நம்பியாரும், பிரித்திவியும் சேர்ந்து சாச்சியின் கதைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்களாம். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளிவந்த ‘அய்யப்பனும் கோஷியும்’ மிகப்பெரிய ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

தனது நன்றிக் கடனை தீர்க்கும் வண்ணம் பிருத்திவி ராஜ் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மலையாள  திரையுலகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து  வருகின்றன.