Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

ப்ரின்ஸ் கலக்கலா இல்ல சொதப்பலா? விமர்சனத்தை கூட கேட்க விரும்பாத ரசிகர்கள்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா  ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம். இந்த இருவர் தவிர்த்து சிவாவின் அப்பாவாக சத்யராஜ், வில்லனாக பிரேம்ஜி நம்மை கவர்கின்றனர். ஸ்கூல் டீச்சராக சிவா, முற்போக்கு சிந்தனை உள்ளவராக சத்யராஜ். சிவா வேலை செய்யும் இடத்தில் புதிதாக வருகிறார் நாயகி. நம்மை அடிமை படுத்திய இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெண்ணை காதலிக்கிறார் சிவா.

ஒருபுறம்  நாயகியின் அப்பா தனக்கு சொந்தமான இடத்தை விற்க முயற்சிக்கிறார் மறுபுறம் சிவா தனது காதலை சக்ஸஸ் செய்ய போராடி வருகிறார். இடம் விறக்கப்பட்டதா, சிவா காதலுக்கு என்ன எதிர்ப்பு கிளம்பியது என காமெடி கலந்து படமாக்கியுள்ளனர் இந்த டீம்.

குறைந்த பட்ஜெட், சுமாரான கதை மற்றும் தொய்வான திரைக்கதை இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ். நட்புக்காக படத்தில் வரும் சூரியின் காட்சிகள் கூட நமக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. சிவாவின் பிராண்ட் வால்யூ அதிகரித்து வரும் நேரத்தில் இப்படி ஒரு படம் அவரின் சினிமா காரியருக்கு ஸ்பீட் பிரேக்கர் தான்.

என்னதான் முயன்றும் சிவா மற்றும் சத்யராஜ் இருவராலும் இப்படத்தை காப்பாற்ற முடியவில்லை. பிரின்ஸ் பெயில் தான். சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இது மிக மொக்கையான படம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது.

இதனால் வசூல் ரீதியாக மிகப்பெரிய அடி விழும் என்பது உறுதி. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே கடன்கள் நிறைய இருந்து தற்போது தான் மீண்டு வந்தார். ஆனால் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை இந்த படத்தின் மூலம் நஷ்டம்தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2/5

Continue Reading
To Top