Tamil Cinema News | சினிமா செய்திகள்
2020-ல் மகேஷ் பாபு ரசித்து பாராட்டிய தமிழ் படம்.. ஹீரோயின்கள் மேல் ஏன் இந்த ஓரவஞ்சனை ஜி
டோலிவுட் என்ற வட்டத்திற்கு வெளியேவும் தென்னிந்தியா முழுவதும் ரீச் உள்ள நடிகர். இவரது டப்பிங் படங்களுக்கும் நல்ல டிமாண்ட் உண்டு. ட்விட்டரில் பல முறை தான் பார்த்து ரசித்த, புதிய படங்களை மனதார பாராட்டுவது இவரின் ஸ்டைல். அந்த வகையில் இவர் பிப்ரவரி 14 ரிலீசான ரொமான்டிக் காமெடி படமான “ஓ மை கடவுளே” பற்றி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையில் அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி (கௌரவ தோற்றத்தில்) வெளியான படம். ஸ்டைலிஷான மேக்கிங், அசத்தலான பின்னணி இசை, யதார்த்தமான நடிப்பு என அனைத்துமே இப்படத்தின் ப்ளஸ்.
இந்தப் படத்தை பார்த்து முடித்துவிட்டு… “முழு படத்தையும் ரசித்தேன், அனைவரும் அழகாக நடித்துள்ளனர். சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர். அசோக் செல்வன் யதார்த்தமாக நடித்துள்ளார்.” என பதிவிட்டார்.
இந்த ஸ்டேட்டஸ் பார்த்து விட்டு படக்குழு தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். ஹீரோ அசோக் செல்வன் தலை கால் புரியாமல் ஆடுவதாக சொல்லியுள்ளார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உங்களின் ரசிகன் நான், உங்களிடமிருந்து இதுபோன்ற பாராட்டை பெறுவதில் மனது பிளாக் ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார். ஹீரோயின் ரித்திகா சிங் இது நிஜமா என தோன்றவைக்கிறது உங்களிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகள் என சொல்லியுள்ளனர்.

Oh my kadavule
என்ன தான் ஹீரோ இயக்குனரை மனதார பாராட்டினாலும் ஹீரோயின் இருவரில் ஒருவரை கூட டாக் செய்யாமல் விட்டது ஏன் என்றே தோன்றுகிறது.
