இந்திய திருநாட்டில் வாழும் மக்களை விட விலங்குகளுக்கு அதிகம் குரல் கொடுப்பவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள மேனகா காந்தி. இவர் இந்திரா காந்தியின் மூத்த மருமகள்.

காங்கிரஸில் இந்திராகந்தியின் மற்றொரு மருமகள் சோனியா காந்தி கட்சியின் தலைவராகவும், அவரது மகன் பொதுச் செயலாளராகவும் உள்ளனர்.

அதுபோல மேனகா காந்தி தனது மகன் வருன்காந்தியையும் பாரதிய ஜனதா கட்சியில் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதில் அவரது மகனின் செயல்பாடுகள் பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தனது மகனை தனது பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதுபோல தனது மகனை தனது அருகிலேயே வைத்துக் கொண்டார்.

மேனகா காந்தி அமைச்சகத்தில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழுந்தைகள் நலவாரிய உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.

இதில் அவரது மகன் வருண் காந்தி உறுப்பினர் 6 பேருக்கு தலா 10 கோடி என்று கல்லா பார்த்துவிட்டதாக தெரிய வருகிறது.

பின்னர் அம்மாவின் அனுமதியோடு கோப்புகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்துக்கு சென்றது. அதில் கட்டுமான தொழில் அதிபர், நகைக்கடை அதிபர், போன்றவர்களின் பெயர்கள் இருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி, அமைச்சர் மேனகா காந்தியை வரவழைத்து அமைச்சரின் மகன் கல்லாடிக் கட்டிய விவரத்தை ஐபி அறிக்கையாக பிரதமருக்கு அனுப்பிய கோப்பை கையில் கொடுத்தாராம்.

பின்னர் உங்கள் அமைச்சகத்தின் சார்பில் என் அனுமதியில்லாமல் இனி யாரையும் நியமிக்கக்கூடாது என்று எச்சரித்தாராம். இதில் அதிர்ந்து போன அமைச்சர் இனி மகனுக்கு என்ன செய்து என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளாராம்.