Connect with us
Cinemapettai

Cinemapettai

bala-subramaniyam-modi

India | இந்தியா

பிரதமர் மோடி வீட்டில் பாரபட்சம்.. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி!

பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்ஃபி எடுத்ததற்கு தமிழ் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யுடன் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான், அமீர் கான், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், போனி கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காததற்கு தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா காமினேனி கொனிடேலா வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ” ஈநாடு நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றிக்கடன் பட்ட அவரால் தான் அக்டோபர் 29-ம் தேதி பிரதமர் மோடி இல்லத்தில் அளித்த விருந்தில் நான் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் வீட்டுக்குள் நுழையும் போது எங்கள் அனைவரின் செல்போனும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கிவிட்டார்கள். அதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் எங்களுக்கு டோக்கன் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த நாளில் பிரதமருடன் சில பிரபலங்கள் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். சில சம்பவங்கள் நம்மை வாயடைக்க வைக்கும்” என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top