fbpx
Connect with us

Cinemapettai

பிரதமர் மோடியின் கூட்டத்தில் வெடிகுண்டு..! ஐஎஸ் தீவிரவாதிகள் அதிர்ச்சித் தகவல்..!

Prime Minister-Modi

News | செய்திகள்

பிரதமர் மோடியின் கூட்டத்தில் வெடிகுண்டு..! ஐஎஸ் தீவிரவாதிகள் அதிர்ச்சித் தகவல்..!

தசரா விழாவையொட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஐஎஸ் தீவிரவாதிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உஜ்ஜைன் சென்ற ரயிலில் கடந்த 7-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் கைது செய்யப்பட்ட முகமது தனீஷ், அதிப் முசாபர் ஆகிய தீவிரவாதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விழாவில் வெடிகுண்டு வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தசரா விழாவை ஒட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி லக்னோவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

கூட்டம் நடைபெற்ற மைதானத்தின் அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தாங்கள் தயாரித்த வெடிகுண்டை வைத்ததாகவும் ஆனால் 2 நாட்கள் கழித்து வந்து பார்க்கையில் அதில் மின்கம்பிகள் மட்டுமே இருந்ததாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகவும் ஆனால் அந்த குண்டு அதிர்ஷ்டவசமாக வெடிக்காததாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் அளித்துள்ள அதிர்ச்சித் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top