Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

பாங்க்ரா டான்ஸ் ஆடிவிட்டு இளம் வீரரை கட்டி பிடித்த ப்ரீத்தி ஜிந்தா

ஐபில் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டீம்மை வீழ்த்தியது.

சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங் உதவியுடன் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ரிஷப் பன்ட் – காலின் இங்ராம் ஜோடி ஆடிய பொழுது கடைசி 4 ஓவரில் 30 ரன் தேவை என இருந்தது. எளிதில் ஜெயிக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் ஷமி மட்டும் குர்ரன் அசத்தலாக வீசினர்.

டெல்லி அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்குள் பறிகொடுத்தது. 17 மற்றும் 19 வது ஓவரில் ஷமி தல ஒரு விக்கெட் வீழ்த்தினார். 17 ஆம் ஓவரில் அஸ்வின் மொரிஸ் அவர்களை ரன் அவுட் செய்தார். குர்ரன் 18 மற்றும் 20 வது ஓவர்களில் தலா இரண்டு விக்கெட் எடுத்தார். அதிலும் 18 ஆம் ஓவரின் கடைசி பால் மற்றும் 20 வது ஓவரின் துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து ஹாட் ட்ரிக் அடித்தார்.

ஒபெநிங் ஆடிய இளம் வீரர் சாம் குர்ரன் 20 ரன், 10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் போட்டி முடிந்த பின் டீம் ஓனரை பார்க்கும் சாம் டான்ஸ் ஸ்டெப் போட, ப்ரீத்தியும் ஆட பின்னர் அவரை கட்டி பிடிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top