Connect with us
Cinemapettai

Cinemapettai

ப்ரீத்தி ஜிந்தாவின் புதிய டி20 அணி . ஸ்டீபன் பிளெமிங் தான் கோச்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ப்ரீத்தி ஜிந்தாவின் புதிய டி20 அணி . ஸ்டீபன் பிளெமிங் தான் கோச்!

ஐபில் போட்டிகளின் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் கிங்ஸ் XI என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ப்ரீத்தி ஜிந்தாவின் முகம் மட்டுமே. தான் ஓனர் என்ற பொழுதிலும், ஒரு கிரிக்கெட் ரசிகையை போலவே நடந்துக்கொள்பவர் அவர்.

நமது ஐபில், பிக்பாஷ் போல் தென்னாப்பிரிக்காவில்  டி20  போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 8 அணிகள் மோதும் இப்போட்டிகள், நவம்பர் 3 அன்று தொடங்க உள்ளது . இந்நிலையில் ப்ரயம்ஸ்டோன் என்ற நிறுவனம் பின் வாங்கியதால் , இந்த ஸ்டெல்லேன் போஸ்ச் அணியை தற்போழுது ப்ரீத்தி வாங்கியுள்ளார். ஏற்கனவே, இந்த லீகில் கொல்கத்தா நைட் ரைடெர்சின் ஷாருக்கான் , டெல்லி டேர் டெவில்சின் ஜிம்ர் குரூப்  அணி உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்த அணியின் ஹெட் கோச்சாக ஸ்டீபன் பிளெமிங்கும் , அவருக்கு உதவியாக எரிக் ஸிம்மன்சும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் . இந்த அணியின் ஸ்டார் பிளேயராக  டு பிளெஸ்ஸி நியமிக்கப் பட்டார் . மேலும் இலங்கையின் லசித் மலிங்கா, இங்கிலாந்தின் அலெஸ் ஹால்ஸ் , பாகிஸ்தானின் இமாட் வாசிம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் .

‘ப்ரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து வேலை செய்வதில் தான் ஆர்வமாக உள்ளதாகவும் . போலந்து பார்க்கில் இருக்கும் உள்ளூர் ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்யும் விதமாக இந்த லீக் அமையும்.’ என்றும் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: கிங்ஸ் XI பஞ்சாபில் , இருந்த ஒரு வீரரும் இந்த புது டீமில் இடம் பெறாதது தான் ஆச்சிர்யமான விஷயம் .

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top