fbpx
Connect with us

டெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.

News | செய்திகள்

டெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.

ஆரம்பம் முதலே விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது அட்லீ என்ற தகவல் உறுதியாக ஆன ஒன்று. எனினும் மற்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இன்று காலை முதலே இப்படம் தான் கோலிவுட்டில் ஹாட் டாக்.

முதலில் படத்தினை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 4.30 வெளியாகும் என்றனர். பின்னர் மயிலாப்பூர் கோவிலில் ஸ்கிரிப்ட் புக் இருக்கும் போட்டோ வெளியானது. மதியத்திற்கு மேல் இப்படத்தை தயாரிப்பது AGS என்பதும் உறுதியானது.

ஏ ஜி எஸ், தளபதி, அட்லீ, ரஹ்மான் இருப்பது அனைவரும் அறிந்தது, இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகையாளர்கள் அறிக்கையில் முழு விவரமும் உள்ளது.

மெர்சல் படத்தில் பணியாற்றிய அதே டெக்கினிக்கல் டீம்மை இதிலும் பயன் படுத்துகிறார் அட்லீ.

ags press release

ஹாப்பி தீபாவளி 2019 என்ற வாசகம் இருப்பதால், சர்கார் போலவே இதுவும் தீபாவளி ஸ்பெஷல் என்பது உறுதி ஆகிவிட்டது.

சினிமாபேட்டை கொசுறுநியூஸ்

வரும் வருடம் தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறு அன்று வருகின்றது. சொல்லுங்க அர்ச்சனா கல்பாத்தி மேடம் நீங்க சண்டே ரிலீஸ் பண்ணுவீங்களா அல்லது வியாழன் அதாவது 24 ரிலீஸ் செய்யப்போறீங்களா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top