Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்துக்கு மங்காத்தா- பிரேம்ஜிக்கு தமிழ் ராக்கர்ஸ்! வைரலாகுது ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

அஜித்துக்கு மங்காத்தா- பிரேம்ஜிக்கு தமிழ் ராக்கர்ஸ்! வைரலாகுது ட்ரைலர்

பிரேம்ஜி அமரன் நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர். 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார். தன் அண்ணன் வெங்கட் பிரபு படங்களில் எதார்த்தமான தன்னுடைய காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் பிரேம்ஜி. இப்பொழுது இசை அமைப்பில் சற்றே பிஸி.

இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ் பட போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இசையமைக்க பாடல்களை கங்கை அமரன் எழுதுகிறார்.

இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மங்காத்தா படத்தில் வருவது போல பணம் இப்படத்திலும் முக்கிய ரோல் என்பது ட்ரைலர் பார்க்கும் பொழுதே தெரிகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top