Connect with us
Cinemapettai

Cinemapettai

சிகரட், சாராய பாட்டில் என மாஸாக வெளியானது பிரேம்ஜியின் பர்ஸ்ட் லுக்- வேற லெவல் பட டைட்டில் ஜி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிகரட், சாராய பாட்டில் என மாஸாக வெளியானது பிரேம்ஜியின் பர்ஸ்ட் லுக்- வேற லெவல் பட டைட்டில் ஜி

கங்கை அமரன் குடும்பத்தின் வாரிசு. நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர். 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தன் அண்ணன் வெங்கட் பிரபு படங்களில் எதார்த்தமான தன்னுடைய காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் பிரேம்ஜி. இப்பொழுது  இசை அமைப்பில் சற்றே பிஸி.

இந்நிலையில் நேற்று இவரது போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி வைரலானது. அந்தக்காலத்து ரஜினி ஸ்டைல் போல அமைத்துள்ளது இந்த போஸ்டர். போஸ்டரை காட்டிலும் தமிழ் ராக்கர்ஸ் என்கிற பெயர் தான் பலரின் ஆவலை தூண்டியிருக்கிறது. பட அறிவிப்பு போஸ்டர் போல தான் உள்ளது.

premji in tamil rockers

ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இசையமைக்க பாடல்களை கங்கை அமரன் எழுதுகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த டீம் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top