பார்ட்டி பண்ணும் பிரேம்ஜி பாட்டியுடன்- சத்ய சோதனை படத்தின் வித்யாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

கங்கை அமரன் குடும்பத்தின் வாரிசு. நடிகர், பாடகர், இசைஅமைப்பள்ளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர். 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரேம்ஜி. எதார்த்தமான தன்னுடைய காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் பிரேம்ஜி.

“ஒரு கிடாயின் கருணை மனு” படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் “சத்திய சோதனை” என்ற புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஆட்டோ சங்கர் எனும் பிரபல வெப்சீரிஸ் நடிகை ஸ்வயம் சித்தா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ்’ ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் பிரேம்ஜியுடன் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிகச் சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார்.

premgi in sathya sothanai

சில தினங்களுக்கு முன் வெளியான இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.