நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்து வருகிறார்கள்.

இதில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே.

இந்நிலையில் மலரே பாடலின் தெலுங்கு பதிப்பான எவரே வீடியோ பாடல் அண்மையில் இணையத்தில் வெளியானது. இந்த பாடலை மலையாள பாடலுடன் ஒப்பிட்ட ரசிகர்கள், யூ டியூபில் இந்த பாடலுக்கு நெகட்டிவ்வான கமெண்ட்களை பதிவு செய்து வந்தனர்.

ஒருகட்டத்தில் இது எல்லை மீறவே, தற்போது கமெண்ட் பகுதியை படக்குழு பிளாக் செய்துள்ளது.