fbpx
Connect with us

நாங்கள் சோம்பேறி தான்!-கேரள அரசிற்கு ப்ரேமம் படக்குழுவினரின் நக்கல் பதிலடி

News | செய்திகள்

நாங்கள் சோம்பேறி தான்!-கேரள அரசிற்கு ப்ரேமம் படக்குழுவினரின் நக்கல் பதிலடி

premam002கேரளாவில் சமீபத்தில் நடந்த மாநில விருது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் ப்ரேமம் படத்திற்கு ஒரு விருது கூட கொடுக்காதது மட்டுமின்றி, இப்படம் சோம்பேறி தனமாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.இதற்கு இப்படத்தின் சவுண்ட் டிசைனர் விஷ்ணு கோவிந்த் பதிலுக்கு கலாய்க்கும்படி பதிலடி கொடுத்துள்ளார்.

இதில் ‘ஆம் நாங்க சோம்பேறிகள் தான், இப்படத்தில் நடித்தவர்கள் சோம்பேறிகள், அதனால் தான் அவர்கள் படத்தில் நடித்தது போலவே தெரியவில்லை.இசையமைப்பாளர் ஒரு சோம்பேறி அதன் காரணமாக தான் தேவையில்லாத இடங்களில் பாடலோ, இசையோ இல்லை.

இவர்களுக்கு எல்லாம் மேலாக இயக்குனர் தான் நம்பர் 1 சோம்பேறி.இந்த படம் சென்னையில் வெறும் 250 நாட்கள் தான் ஓடியுள்ளது, வேறு வேலையில்லாமல் இந்த படத்தை இத்தனை நாட்கள் பார்த்த மக்கள் எத்தனை சோம்பேறிகள்.

ஆனால், மக்கள் கொண்டாடும் இந்த சோம்பேறித்தனத்தை தொடர்ந்தும் செய்வோம். தொடர்ந்தும் சோம்பேறித்தனமான படங்களையே தருவோம். கூடவே நின்று ஆதரவு தந்த அனைத்து சோம்பேறி ரசிகர்களுக்கு மிக்க நன்றி’ என பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top