Connect with us

Cinemapettai

பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இந்த நடிகர் தான் சரியான தீர்வு.. அஜித்-விஜய் எதற்கு? என இயக்குனர் காட்டம்

premam-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இந்த நடிகர் தான் சரியான தீர்வு.. அஜித்-விஜய் எதற்கு? என இயக்குனர் காட்டம்

மலையாள சினிமாவில் நிவின்பாலி நடிப்பில் மூன்று விதமான காலகட்டங்களில் உருவாகும் காதல் கதையை மிகவும் சுவாரசியமாக மலையாள மொழி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்ட சூப்பர் ஹிட் திரைப்படம் பிரேமம்.

பல மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் என அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகைகளும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கின்றனர்.

நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் அந்த படத்தையும் இயக்கி இருந்தார். அதுமட்டுமில்லாமல் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல யூடியூப் சேனல்கள் அல்போன்ஸ் புத்திரனை பேட்டி எடுத்து வருகின்றனர். அதில் பிரேமம் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் விஜய்யா? அஜித்தா? என பிரபல யூடியூப் சேனல் ஒன்று கேட்டுள்ளது.

அதற்கு டென்ஷனான அல்போன்ஸ் புத்திரன், எதற்கெடுத்தாலும் அஜித் விஜய் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் எனவும், கதாபாத்திரத்திற்கு யார் சரியான தேர்வாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு தெரியும் எனவும் டென்ஷனாகி உள்ளார்.

அதன் பிறகு ஒருவழியாக தமிழ் ரீமேக்கில் பிரேமம் படத்தை எடுத்தால் கண்டிப்பாக நடிகர் தனுஷ் வைத்து தான் எடுப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்க சரியான தேர்வு அவர்தான் என தெரிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top