பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. மனம் திறந்த அல்போன்ஸ் புத்திரன்

ஒரே ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை என்றால் அது சாய்பல்லவி தான். ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மலர் கதாபாத்திரத்தில் மூலம்தான் மிகவும் பிரபலம் அடைந்தார். படம் வெளிவந்த காலத்தில் படத்தில் நடித்த நிவின் பாலியை விட சாய் பல்லவிக்கு தான் ஏராளமான ரசிகர்கள் உருவாக்கினர்.

அந்தளவிற்கு சாய்பல்லவியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது பிரேமம் திரைப்படம். ஆனால் இப்படத்திற்கு முதலில் தேர்வானது சாய்பல்லவி கிடையாது என அப்படத்தின் இயக்குனர் வெளிப்படையாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் தங்களது ரசிகர்களை கேள்வி கேட்கும் மாறும் அதற்கு பதில் அளிப்பதாகவும் கூறுவது வழக்கம். அப்படி அல்போன்ஸ் புத்திரன் உங்களுக்கு சினிமா பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்கலாம் என சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருந்தார்.

premam sai pallavi
premam sai pallavi

அவர் சொன்ன ஒரு சில நிமிடங்களிலேயே மளமளவென சமூக வலைதளப் பக்கத்தில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் பெரும்பாலும் பிரேமம் படத்தை பற்றிய கேள்விகள் தான் அதிகம் ரசிகர்கள் கேட்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் படங்களில் தமிழ் மொழி மீதான ஆர்வம் இருப்பதை எங்களால் உணர முடிகிறது, குறிப்பாக மலர் கதாபாத்திரம் மற்றும் உங்களது படத்தில் இடம்பெறும் தமிழ் பாடல் என அனைத்திலும் தமிழ் பற்று இருக்கிறது எனக் கூறினார். அதற்கு அல்போன்ஸ் புத்திரன் நான் ஊட்டியில் படித்தேன் சினிமாவிற்காக சென்னையில் வசித்தேன் அதனால் என்னுடைய படங்களில் தமிழ் தாக்கம் இருக்கும் என கூறினார்.

அடுத்ததாக மலர் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வுவானது சாய் பல்லவியா என கேட்டதற்கு அல்போன்ஸ் புத்திரன் முதலில் மலர் கதாபாத்திரம் அசின் வைத்து தான் உருவாக்கியதாகவும் கொச்சியிலிருந்து மலர் டீச்சர் வருவது போல் கதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அப்போது அசினை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை நிவின்பாலி முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் தமிழிலிருந்து மலர் கதாபாத்திரத்தில் ஒரு டீச்சர் வருவதாக கதையை மாற்றினேன் என கூறியுள்ளார்.

இதனை வைத்து பார்க்கும்போது மலர் கதாபாத்திரம் முதலில் உருவாக்கப்பட்டது அசின்க்குதான் என்றும் ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியாததால் சாய் பல்லவி நடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது .மேலும் ரசிகர்கள் பலரும் அசின் டீச்சராக நடித்து இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் சாய்பல்லவி போல் பயங்கரமாக நடனமாடி இருக்க மாட்டார் என கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -