telugu-premamமலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய ‘பிரேமம்’ திரைப்படம் தெலுங்கில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தில் மலர் என்ற முக்கியமான கேரக்டரில் ஸ்ருதிஹாசனும், மற்ற கேரக்டர்களில் நாகசைதன்யா, அனுபமா பரமேஸ்வரன்,அமைரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் இதுவரை வைக்கபடாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழுவினர் இன்று டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு தெலுங்கிலும் ‘பிரேமம்’ என்றே வைத்துள்ளார்களாம். பிரேமம் என்ற டைட்டிலுக்கு இணையாக வேறு டைட்டில் கிடைக்கவில்லை என்பதால் அதே டைட்டிலை வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.