இந்த ஆசையின் சொந்தக்காரர் நம்ம ப்ரேமம் பட புகழ் அனுபமா பரமேஸ்வரன் தான்.

anupama parameswaran

அட ஆமாங்க, இவர் மட்டும் அல்ல  இன்றயை தேதியில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் பலரது டார்கெட் இது தான். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, ஸ்வீட்டி அனுஷ்கா செட்டி தான் இவர்களுக்கு பெஞ்ச் மார்க்.

தமிழில் தனுஷின் கொடி படம் வாயிலாக அறிமுகம் ஆனவர். இதற்கு முன்பே பள்ளி மாணவியாக ப்ரேமம் படத்தில் நடித்து நன்றாக ரீச் ஆன நடிகை.

சென்னையில் தங்கி தீவிரமாக கதை விவாதங்களில் பங்கேற்று வருகிறார். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள ரோல், சவாலான   கதாப்பாத்திரம் போன்றவற்றிக்கு காத்திருப்பதாக பலரிடமும் கூறி வருகிறார்.

#AnupamaParamaeswaran

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

அனுபமாவிற்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்குமாம். அவரை ரோல் மாடலாக பாவித்துள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கிறார்கள். லேடி சூப்பர்ஸ்டார் போலவே கதை தேர்வு செய்து விஜய், சூர்யா, அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது இவற்றின் ஆசையாம்.

இவரின் அடுத்த பட அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

எல்லாருமே நயன்தாரா மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிப்பேன் என்றால். மாஸ் படங்களில் பாடலுக்கு டான்ஸ் ஆட ஹீரோயினுக்கு எங்க போறது ?