பிரேமம் மலையாள படத்தில் அறிவு எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆனந்த் நாக். இவர் அடுத்ததாக சசிக்குமார் நடிக்கும் வெற்றிவேல் எனும் தமிழ் படத்தில் சசிக்குமாருக்கு தம்பியாக நடித்துள்ளார்.

அண்ணன் தம்பி உறவை மையப்படுத்திய இப்படத்தை வசந்த மணி இயக்கியுள்ளார். இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கி படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது.