அல்போன்ஸ் புத்திரன்

இந்த பெயர் இந்தியா சினிமாவில் பிரபலமான ஒன்று. முதல் படம் ‘நேரம்’ தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான படம், கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. இரண்டாவது படம் ‘ப்ரேமம்’ மலையாளத்தில் மட்டும் வெளிவந்தாலும் எல்லா ஸ்டேட்களிலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்களை தியேட்டர் நோக்கி செல்ல வைத்த படம்.

பிரேமம்; வெளியாகி கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இவரது அடுத்து படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

premam

முதலில் இவர் அருண் விஜய்யை வைத்து தமிழில் படம் இயக்குவார் என்று தகவல்கள் வந்தது. பின்னர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், தமிழ் மற்றும் மலயத்தில் வெளியாகும், ஷிட்ட்றத ஒரு ஹீரோ என்ற தகவலும் வெளியானது. இதுவும் வதந்தியாகவே ஆனது.

அதிகம் படித்தவை:  முதல் முறையாக மீடியா பக்கம் வந்த தேவயானியின் இரண்டு மகள்கள் புகைப்படம்.!

இந்நிலையில் இவரின் அடுத்த படம் தமிழில் தான். மேலும் இப்படம் இசையை மையப்படுத்தி இருக்கும் என்று முன்பே ஒரு பெட்டியில் தெரிவித்தார் அல்போன்ஸ்.

காளிதாஸ் ஜெயராமன்

jayaram family photo

தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் அறிமுகமானவர். நடிகர் ஜெயராமின் மகன். இவர் நடிப்பில் மலையாளத்தில் பூமரம் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காளிதாஸ், அல்போன்ஸ் புத்ரன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அப்பொழுது பேசிய காளிதாஸ் ஜெயராம் “இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முந்தைய 2 படங்களின் ரசிகன் நான். இப்படத்தின் ஒன்-லைன் மிக சுவாரஸ்யமாக இருந்தது. இதில் நான் கமிட்டானதில் மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஐ லவ் யூ பரியா ! "வா ரயில் விட போலாமா"  வீடியோ பாடல்.
kalidas jayaram

சினிமாபேட்டை கிசு கிசு

இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக அருண் விஜய் அல்லது சித்தார்த், இவர்களில் யார் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லையே ?

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரீக் முடியும் வரை காத்திருப்போம்.