Connect with us

Cinemapettai

5 வருடத்திற்கு பிறகு ஒரே படத்தில் நடிக்கும் பிரேமம் நாயகிகள் சாய் பல்லவி, மடோனா.. ஹீரோ யார் தெரியுமா?

saipallavi-madonna-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வருடத்திற்கு பிறகு ஒரே படத்தில் நடிக்கும் பிரேமம் நாயகிகள் சாய் பல்லவி, மடோனா.. ஹீரோ யார் தெரியுமா?

பிரேமம் என்ற மலையாள படம், பிரபல நாயகிகளுக்கு மிகப்பெரிய சினிமா வாழ்க்கையை கொடுக்கப் போகும் என்பது அந்த படத்தில் நடிக்கும் வரை அவர்களுக்கே தெரியாது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரேமம் படம் தென்னிந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் பிரேமம். இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று காலகட்டங்களில் அனுபமா பரமேஸ்வரன், சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் ஜோடி போட்டனர்,

பிரேமம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அனுபமா, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சாய்பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகள் ஆகிவிட்டனர்.

ஆனால் மடோனா செபாஸ்டின் தான் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் மாட்டிக்கொண்டு பெரிய அளவு வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். இந்நிலையில் மடோனா செபாஸ்டியன் தற்போது தெலுங்கு பக்கம் செல்கிறார்.

மலையாளத்தில் எப்படி நிவின் பாலியோ, அப்படித்தான் தெலுங்கில் நடிகர் நானி. இவர் தமிழுக்கும் பரிச்சயம் தான். இந்நிலையில் நானி நடிக்கும் சியாம் சிங்கர ராய் என்ற அடுத்த படத்தில் நாயகிகளாக சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டின் நடிக்க உள்ளார்களாம்.

madonna-nani-saipallavi

madonna-nani-saipallavi

இந்த படம் வெளியான பிறகு கண்டிப்பாக மடோனா செபாஸ்டின் தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கீர்த்தி ஷெட்டி என்ற மற்றொரு நடிகையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். எத்தன பேரு!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top