fbpx
Connect with us

ஒரே ஓவரில் கெயில், மோர்கன், பொல்லார்ட், ஆலன் என நால்வரை அவுட் (ஹாட் – ட்ரிக்) ஆக்கிய பிரவின் தாம்பே. வீடியோ உள்ளே .

Sports | விளையாட்டு

ஒரே ஓவரில் கெயில், மோர்கன், பொல்லார்ட், ஆலன் என நால்வரை அவுட் (ஹாட் – ட்ரிக்) ஆக்கிய பிரவின் தாம்பே. வீடியோ உள்ளே .

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டிகளுக்கு தான் அதிக ரசிகர் வட்டம் இருந்தது. இந்நிலையில் கபில் தேவ் தலைமையில் ICL நலன் ரேத் ஆனது, எனினும் பிசிசிஐ அதனை முடக்கியது. இன்ற சூழலில் கத்துக்குட்டி நாடு கூட டி 20 லீக் நடத்துகிறது. உலகளவில் கிளப் மேட்சுகளும் நல்ல ரீச் ஆகி வருகின்றது.

டி 10 லீக்

இது 10 ஓவர் பார்மட்.  இப்போட்டிகளில் இரண்டாவது சீசன் இது. வழக்கம் போல பல நாட்டு ஜாம்பவான்கள் இதில் ஆடுகின்றனர். இந்தியாவை சேர்ந்த நபர்களும் அடக்கம். ஆர் பி சிங், முனாப் படேல், சுப்பிரமணியன் பத்ரிநாத், சேவாக், ஜாஹிர் கான், பிரவீன் குமார், பிரவின் தாம்பே ஆடுகின்றனர்.

பிரவின் தாம்பே
ராஜஸ்தான் அணியால் ஐபில் ஆடியவர். பின்னர் மும்பை இந்தியன்ஸ் டீமுக்கும் ஆடினார். கடைசியாக 2016 இல் ஐபில் ஆடினார், அதன் பின் வயது காரணமாக ஓரங்கட்டப்பட்டார். தற்பொழுது 47 வயதாகிறது.

இவர் தான் டி 10 லீக்கில் புதிய சாதனை படைத்துள்ளார். மனிதர் முதல் ஹாட் ட்ரிக் எடுத்துள்ளார். தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஓவரில் 15 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Pravin Tambe spell

சிந்திஸ் அணி சார்பில் முதல் ஓவர் இவருக்கு வழங்கப்பட்டது. கேரளா நயட்ஸ் கெய்ல் எதிர்கொள்ள லெக் சைட் வீச அது பௌண்டரி சென்றது, ஐந்து ரன்கள். பின்னர் கிறிஸ் கைலே விக்கெட்டை கேட்ச் வடிவில் வீழ்த்தினார்.

அடுத்தது உவரிசையாக மோர்கன் (கேட்ச்), பொல்லார்ட் , ஆலன் (போல்ட்) என தன் ஹாட் ட்ரிக்கை பூர்த்தி செய்தார்.

https://www.youtube.com/watch?v=BpowN4mIwqU

தான் அடுத்து வீசிய ஓவரில் இலங்கையின் தரங்காவை போல்ட் வடிவில் அவுட் ஆக்கினார்.

asv

ஒருபுறம் பேட்டிங் சரவெடி மறுபுறம் பௌலிங்கில் அதிரடி என இந்த லீக் கலக்குகிறது. தற்பொழுது நிறைய நபர்கள் இந்த லீக் பார்க்க ஆர்மபித்துவிட்டனர்.

பி கு

காப்பிரயட் காரணமாக வீடியோ லிங்க்கில் பிரச்சனை உள்ளது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top