பிரதாப் போத்தன் இயக்கத்தில் மரண வெற்றி பெற்ற படங்கள்.. நெப்போலியனின் அடையாளமான சீவலப்பேரி பாண்டி

கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.

மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். இவர் ராதிகாவுடன் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்தது, அவர்கள் இருவரும் நண்பர்கள் துணையோடு திருமணமும் செய்து கொண்டனர். சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

நடிப்பை தாண்டி இயக்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று இவர் இயக்கிய படங்கள் நிறைய உள்ளன அதில் நிறைய தோல்வி படங்கள்தான். சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம் இயக்கியது இவர்தான் ஆனால் தோல்வி. ஆத்மா என்ற பிரம்மாண்ட படம் எடுத்தார், கார்த்திக் நடித்த லக்கி மேன் இவர்தான் எடுத்தார் ஆனால் தோல்வி.

இப்படி நிறைய தோல்வி படங்கள் கொடுத்தாலும் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அந்த படத்தை பற்றியும், முழு படத்தின் லிங்கயும் பார்க்கலாம்.

வெற்றி விழா

vetri vizha
vetri vizha

பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி விழா. ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்த படம் இன்றும் ரசிகர்களுக்கு பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்தது.  இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

சீவலப்பேரி பாண்டி

seevalaperi pandi
seevalaperi pandi

நெப்போலியன், சரண்யா நடிப்பில் 1994-ல் வெளிவந்தது சீவலப்பேரி பாண்டி. இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. நெப்போலியனுக்கு சினிமாவில் திரும்பிப் பார்க்கக் கூடிய கதாபாத்திரமாகவே அமைந்தது. சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கதை நகரும், ஆதியன் இந்த படத்துக்கு இசையமைத்திருப்பார் இந்த படத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்.

பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்