டாப் ஸ்டாருக்கு கோட் கொடுத்த விசிட்டிங் கார்டு.. பிரசாந்தை மடக்கி பிடித்த விஜய்யின் நண்பன்

Prashanth: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான கோட் கடந்த வாரம் ஐந்தாம் தேதி வெளிவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தற்போது வரை 300 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களிலும் இந்த வசூல் உயரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கோட் படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுக்கும் இப்படம் பக்கா ரீ என்ட்ரி ஆக அமைந்துள்ளது. அதன்படி பிரசாந்த், சினேகா, மோகன், பிரபுதேவா என பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.

அதிலும் 80, 90 கால கட்டங்களில் கொண்டாடப்பட்ட மோகன், பிரசாந்த் ஆகியோரை மீண்டும் திரையில் பார்த்ததில் ஆடியன்ஸ்க்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதே போல் அவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விசிட்டிங் கார்டாகவும் அமைந்துள்ளது.

கோட் படம் கொடுத்த ரீ என்ட்ரி

இதில் பிரசாந்துக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதல் ஆளாக துண்டு போட்டது என்னவோ தளபதியின் நண்பன் சூர்யா தான். தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரசாந்த் சம்மதித்துள்ளார். கிட்டத்தட்ட சூர்யாவுக்கு இணையான கதாபாத்திரம் என்பதாலேயே அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம். விரைவில் அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிப்பதற்கும் சில கதைகளை கேட்டு வருகிறார். இதன் அறிவிப்புகள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவரும் என்கிறது திரையுலக வட்டாரம். ஆக மொத்தம் டாப் ஸ்டார் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.

சூர்யாவுடன் இணையும் பிரசாந்த்

- Advertisement -spot_img

Trending News