fbpx
Connect with us

Cinemapettai

டாப் ஸ்டாரை இயக்கும் ஸ்டைலிஷ் டைரக்டர்.. இதுவாச்சும் ஒர்க் அவுட் ஆகுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டாப் ஸ்டாரை இயக்கும் ஸ்டைலிஷ் டைரக்டர்.. இதுவாச்சும் ஒர்க் அவுட் ஆகுமா?

ஒரு காலகட்டங்களில் அதிகளவுக்கு ஹிட் கொடுத்த டாப் நடிகர்களின் பட்டியலில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் முதல் நாள் முதல் காட்சி கூட தியேட்டரில் கூட்டம் இல்லாத அளவுக்கு மோசமாக இருந்தது. இதனால் தெலுங்கில் ராம்சரண் நடித்த படத்தில் அண்ணன் ரோலில் நடிக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது புதிய படம் ஒன்றில் பிரசாந்த் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தினை ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கப் போவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த படம் ஒரு ரீமேக் படமாக இருக்கும் என்று பிரசாந்த் தரப்பில் கூறப்படுகிறது. அது சமீபத்தில் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படமாகும். இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்துக்காக பிரசாந்த் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருகிறார்.

தற்போது அதன் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தினை லேட்டாக படம் தருவதற்கு பெயர் போன கௌதம் மேனன் இயக்குகிறார்..

இவரு தன்னோட சொந்த படத்தை எடுக்கறக்கே நாலு வருஷம் ஆகும். இதுல ரீமேக் படம் வேற. எப்படியோ 2025 குள்ள வந்துடும்னு எதிர்பார்க்கலாம்.

சரி, பிரசாந்த்க்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top