Connect with us

பிரசாந்த்தின் அந்தாதுன் ரீமேக் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா? போடு! வேற லெவலில் களமிறங்கும் டாப் ஸ்டார்!

prashanth-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரசாந்த்தின் அந்தாதுன் ரீமேக் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா? போடு! வேற லெவலில் களமிறங்கும் டாப் ஸ்டார்!

முயற்சி திருவினையாக்கும் என்ற ஒற்றை பழமொழியை நம்பி ஃபீனிக்ஸ் பறவை போல் தொடர்ந்து தமிழ்சினிமாவில் பல முயற்சிகள் செய்து இழந்த தனது மார்க்கெட்டை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த்.

ஒரு காலத்தில் இளம் ரசிகைகளின் கனவு கண்ணன், ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோ, அடுத்த சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமாவையே தன் கைக்குள் வைத்து கசக்கி எறிந்தவர்தான் டாப் ஸ்டார் பிரசாந்த்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பதற்கேற்ப, யார் கண் பட்டதோ. திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரசாந்த் மார்க்கெட் சரிய தொடங்கியது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் யார் யாரோ தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார்கள்.

இடையில் பிரசாந்த் சில படங்களில் நடித்திருந்தாலும், உண்மையிலேயே பிரசாந்த் படங்களில் இருக்கும் அந்த சுறுசுறுப்பு, ஸ்க்ரீன் பிரசன்ஸ் எல்லாமே மிஸ்ஸிங். என்னதான் தோல்வி படம் கொடுத்தாலும் பிரசாந்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

இந்த வாட்டி மிஸ் ஆகாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வது போல, ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் ஆணழகன் தோற்றத்திற்கு மாறிவிட்டாராம் பிரஷாந்த்.

prashanth-andhadhun-remake

prashanth-andhadhun-remake

மேலும் இந்த படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் இணைய உள்ளாராம். இதனால் இப்போதே அந்தாதுன் தமிழ் ரீமேக் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. மேலும் 18 வருடத்திற்கு பிறகு பிரசாந்துடன் நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதும் கூடுதல் சிறப்பு.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top