fbpx
Connect with us

கருப்பு கண்ணாடியில் அந்தாதூன் கெட்டப்பில் அலறவிட்ட பிரசாந்த் வீடியோ.. இவரது வருகையால் சோகமான முக்கிய நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கருப்பு கண்ணாடியில் அந்தாதூன் கெட்டப்பில் அலறவிட்ட பிரசாந்த் வீடியோ.. இவரது வருகையால் சோகமான முக்கிய நடிகர்

ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த அளவிற்கு அவரது ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளதோ, அதேபோல நடிகர் பிரசாந்தின் ரீ என்ட்ரிகாக காத்திருக்கும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மிகவும் அதிகமாக உள்ளது. இவை எல்லாத்துக்கும் அவருடைய பழைய படங்கள்தான் காரணம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்தே ஆக வேண்டும். அப்படியான சூழ்நிலைதான் ஹிந்தியில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் அந்தாதுன். அந்த படத்தின் ரீமேக்கில் பார்வையற்றவராக பிரசாந்த் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் கெட்டப்பில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இது மேலும் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரசாந்தின் கெட்ட நச்சின்னு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

ஏனென்றால் பாலிவுட்டில் வெளிவந்த படத்தில் கதாநாயகன் ஆயிஷ்மான் குரானா மற்றும் தபு இருவரின் அழகையும் நடிப்பையும் பார்த்து மிரண்டே போனது பாலிவுட். இதனை கண்டிப்பாக பிரசாந்த் அடித்து துவம்சம் செய்து விடுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

prashanth-andhadhoon-movie-getup-still

prashanth-andhadhoon-movie-getup-still

பிரசாந்தின் மிகப்பெரிய ரீ என்ட்ரி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் விஜய்க்கும் அஜித்துக்கும் அல்ல. சூர்யாவும் ஓரளவு ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். அதனால் அவருடைய வருகையின் பாதிப்பு விக்ரமுக்குதான்.

விக்ரம்தான் வெற்றிக்காக மிகவும் போராடி வருகிறார். நன்றாக நடித்தாலும் அவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சரியாக வரவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்கையில் விக்ரமை அடக்கிவிட்டால் சூர்யா, பிரசாந்த் என்றுதான் அடுத்த லிஸ்ட் வெளியாகும்.

விக்ரமும் படங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை அவரும் துருவ் விக்ரமிற்குதான் கதை கேட்டு வருகிறாராம். எது எப்படியோ பிரசாந்தின் பெரிய வருகையும் அவரது வித்தியாசமான படமும் அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்துதான்.

பிரசாந்த் வீடியோ:

Continue Reading
To Top