சனிக்கிழமை, மார்ச் 15, 2025

இந்த படம் மட்டும் ஓடலானா சினிமாவை விட்டே போய்டுறேன்.. சபதம் எடுத்துள்ள டாப் ஸ்டார் பிரசாந்த்

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள் மத்தியில் ஆணழகன் நடிகராக வலம் வந்த டாப் ஸ்டார் பிரசாந்த் சமீபகாலமாக ஒரு வெற்றி கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார் என்பது கோலிவுட் அறிந்த விஷயம்தான்.

ஒரு நடிகர் கம்பேக் என ஒரு படம் செய்யலாம். ஒவ்வொரு படமும் வெளியாகும்போது கம்பேக் கம்பேக் என்று சொல்லிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை என்பது உறுதியாகிவிடும்.

அப்படித்தான் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து பிரசாந்த் என பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள் பிரசாந்த்தா அப்படி என்றால் யார்? என கேட்கும் அளவுக்கு இருக்கிறது அவரது சினிமா கேரியர். பிரசாந்த் நடிப்பில் வெளியான கடைசி பத்து படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதனால் இந்த முறை எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது சென்னையில் அந்தகன் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய படமாக இருக்க வேண்டுமென தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மோகன் ராஜாவை வைத்து படத்தை எடுக்க இருந்தனர்.

ஆனால் தற்போது அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜனே இயக்கி வருகிறார். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என நம்புகிறாராம் பிரசாந்த். அப்படி ஒருவேளை இந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால் இனி சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன் என்று கூறும் அளவுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளாராம் பிரசாந்த்.

andhagan-cinemapettai
andhagan-cinemapettai

Trending News