Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனிஒருவன் ஸ்டைலில் வில்லனாக பிரஷாந்த்! அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பம்
பிரஷாந்தின் அப்பா தியரஜனிடம் உள்ள பணத்திற்கு பத்து படங்கள் கூட எடுக்க முடியும். ஆனால் சில வீடு பிரச்சனைகளால் நடிக்காமல் இருந்தார் பின்பு நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய படங்களில் சாக்லேட் பேபியாக நடித்து ஹிட் குடுத்தார் பிரஷாந்த். அப்பு போன்ற சண்டை படங்களிலும் நடித்தார். ஆனால் அது ஓடவில்லை. பின்பு இடையில் செய்த படங்களும் அவளோவாக ஓடவில்லை.
இப்பொழுது பிரஷாந்த் ஒரு முன்னணி நடிகரின் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதுவும் ராம்சரண் படத்தில் நடிக்கிறார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ஹீரோ என்பதை விட வில்லன் நன்றாக பேசப்படும். உதாரணம் தனிஒருவன் பதில் நடித்த அரவிந்த்சாமி. அதன்பின் அரவிந்சாமியின் படங்களின் எண்ணிக்கை கூடி கொண்டே சென்றது.
இந்த செய்தி பிரஷாந்த் ரசிகர்கள் முதற்கொண்டு அனைவரும் சந்தோசமே. ஒரு நல்ல நடிகன் ஹீரோவாக மட்டும் நடிக வேண்டும் என்றில்லை. நல்ல கதாபாத்திரம் எதுவானாலும் நடிப்பார்கள். இப்பொழுது பிரஷாந்த் அதனை கையில் எடுத்துள்ளார். அதன்பின் அவர் தமிழில் மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். வாழ்த்துக்கள் பிரஷாந்த்.
