fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

18 வருடத்திற்கு பிறகு பிரசாந்த் உடன் கூட்டணி சேரும் பிரபல நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

prasanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

18 வருடத்திற்கு பிறகு பிரசாந்த் உடன் கூட்டணி சேரும் பிரபல நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

நீண்ட நாட்களாக பெரிய வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரசாந்த் உடன் அவரது பழைய சூப்பர் ஹிட் பட ஹீரோயின் 18 வருடங்களுக்கு பிறகு கூட்டணி அமைக்க உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இளம் பெண்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த். இன்று விஜய், அஜித் படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு வரவேற்பு ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை பிரசாந்துக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ஒரு காலகட்டத்தில் அதிக ரசிகர்களை வைத்திருந்தவரும் பிரசாந்த் தான். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவர் புதுப்புது முயற்சிகள் எடுத்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும் என புதுப்புது கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார்.

andhadhun-tamil-remake

andhadhun-tamil-remake

இந்த படத்தில் ஹிந்தியில் தபு நடித்திருந்த முக்கிய கதாபாத்திரத்திற்காக நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். சிம்ரன் ஏற்கனவே பிரசாந்துடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பிரசாந்த், சிம்ரன் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானது என்பதால் அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாந்த், சிம்ரன் கூட்டணியில் உருவான படங்களில் உங்களது பேவரைட் என்ன என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top