Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரசாந்தின் அடுத்த படத்தில் எத்தனை நாயகிகள் தெரியுமா? அறுக்கத் தெரியாதவருக்கு 58 அருவாள் கதைதான்!
நீண்ட நாட்களாக சினிமாவில் வெற்றிக்கு போராடிக்கொண்டிருக்கும் நாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் பிரசாந்த். காதல் நாயகனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
தற்போது விஜய், அஜித் இருக்கும் அளவுக்கு உயரத்துக்கு வரவேண்டிய நடிகர் தன்னுடைய தவறான கதை தேர்வில் சொதப்பி தற்போது ஒரு வெற்றிக்கு ஏங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
பிரசாந்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னுடைய மொத்த வித்தையையும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் தான் அவரை ரசிக்க தவறிவிட்டனர்.
இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை ஜெயம் பட புகழ் மோகன் ராஜா இயக்குவதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இசை சார்ந்த மர்மப் படம் என்பதால் இந்த படம் மிகவும் சுவாரசியமாக இருக்குமாம்.
மேலும் இந்த படத்தில் பிரசாந்துடன் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புது புது ஹீரோயின் போட்டாலும் படம் வெற்றியடைய மாட்டேங்குது என ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த படம் அவருடைய நிலைமையை மாற்றும் என நம்பலாம்.
