Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா ? போட்டோ உள்ளே.

பிரசன்னா திருச்சியில் பிறந்து, வளர்ந்தவர். மணிரத்தினம் தயாரித்த 5 ஸ்டார் படத்தின் வாயிலாக அறிமுகம் ஆனவர். ஹீரோ, வில்லன், கௌரவ வேடம், சப்போர்டிங் ரோல் என பல தரப்பட்ட விதங்களிலும் நடித்துவிட்டார். படத்தின் எண்ணிக்கை என்பதை விட தரத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் ஒருவர்.

கண்ட நாள் முதல்

மணிரத்தினத்தின் உதவியாளர் பிரியா இயக்கிய படம். பிரசன்னா, லைலா, கார்த்திக்குமார், ரெஜினா போன்றவர்கள் நடித்த ரொமான்டிக் காமெடி படம். யுவன் இசையில் பாடல்களும் ஹிட். பிரகாஷ்ராஜ் தயாரித்தார்.

KNM

சிறுவயது முதலே மோதலில் இருந்து ஆரம்பித்து காதலில் முடியும் ரோல் பிரசன்னா – லைலாவுக்கு. வெளிநாட்டு மாப்பிள்ளை ரோலுக்கு இவர் தான் ரோல் மாடல் என்றளவுக்கு பிரபலம் ஆனது கார்த்தி குமாரின் கதாபாத்திரம்.

KNM

இந்நிலையில் இந்த டீம் இயக்குனர் பிரியா தலைமையில் மீண்டும் சந்தித்துள்ளனர். அந்த போட்டோவை பிரசன்னா தன ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

மேலும் “நாங்கள் சந்தித்தோம், சிரித்தோம், கண்ட நாள் முதல் இதனை வருடங்களில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அடுத்த பார்ட் பற்றயும் ஆலோசித்தோம். அவ்வாறு நடந்தால் எப்படி சிறப்பாக இருக்கும்.” என்பதே இவரின் பதிவு.

KNM

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top