கிட்டத்தட்ட ஒரே ஏஜ் குரூப்பில் இருப்பதாலோ என்னவோ இன்றைய இளம் இயக்குனர்கள், ஹீரோக்கள் பலர் எந்த ஈகோவும் இன்றி மாமா, மச்சான், ட்யூட், ப்ரோ என்று சர்வ சாதாரணமாக பழகுகிறார்கள். இவர்களை இது போல் ஒன்றிணைய முக்கியம் காரணம் நட்சத்திர கிரிக்கெட், மற்றும் பல சினிமா சம்மந்தமான சங்கங்களில் நடந்த கொளறுபடியே ஆகும். ஒருவர் படத்தை மற்றவர் ப்ரோமோட் செய்வது, அடுத்தவர் வெற்றியை மனதார பாராட்டுவது என்று ஆரோக்கியமான பாதையில் தான் இன்று தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது.

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்-

கோவையை சேர்ந்த இவர் எடுத்தது என்னவோ நான்கு படங்கள் தான். ஆனால் அதில் அவர் காட்டிய வித்யாசங்கள், இவரை இன்று டாப் இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்துள்ளது. பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில்  பேங்க் திரில்லர் படமான ‘நாணயம்’, சிபிராஜ் போலீசாக நடித்த துப்பறியும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த ஜாம்பீ படமான ‘மிருதன்’, அடுத்து வரப்போவது ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் கூட்டணையில் தமிழ் சினிமாவின் முதல் விண்வெளிப்படமான் ‘டிக் டிக் டிக்’.

படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் ஒர்க்கில் பிஸியாக இருந்தாலும், மனிதர் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த டீவீட்டை தட்டினார் ” நேற்று இரவு நாணயம், இன்று நாய்கள் ஜாக்கிரதை, திங்கள் அன்று மிருதன், சன் தொலைக்காட்சியில், என் படங்கள் வரிசையாக.”

நடிகர் பிரசன்னா

தன்னுடைய சினிமா வாழ்க்கையை லவ்வர் பாயாக ஆரம்பித்தாலும், மனிதர் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால், தனக்கென்று தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் வால்யூ உள்ளவர். முப்பரிமாணம்,பவர் பாண்டி, நிபுணன், துப்பறிவாளன் என்று பேக் டு பேக் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று இல்லாமல், சிறந்த கதை அம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பது இவருடைய ஸ்டைல் ஆகிவிட்டது.

இவர் தான் இயக்குனரின் டீவீட்டுக்கு பதில் ட்வீட் தட்டிவிட்டார் ” அந்த ஹீரோக்களுடன் இரண்டு படங்கள் முடித்து விட்டாய், என்னுடையது இன்னமும் பாக்கி உள்ளது, மைன்ட் இட் ”

இதற்க்கு பதில் டீவீட்டாக இயக்குனர் ” பாக்கியம் என்னுடையது தான். பிகு- துப்பறிவாளன் படத்தில் கதை நகர்வதுர்க்கு நீ உறுதுணையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது.” என்றார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: விண்வெளியையே தொட்டுவிட்டு வந்த இயக்குனர், பிரசன்னாவை வைத்து கடல் சம்பந்தமாக, டைட்டானிக் போல் காதல் படம் எடுப்பாரோ? சும்மா கொளுத்தி போடுவோம்.