“அஞ்சாதே” படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான பிரசன்னா. அதை தொடர்ந்து தற்போது தல-57 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரசன்னா தற்போது தனது உடல் எடையை அதிகரித்து வருகிறாராம். அது ஒரு வேலை தல-57ல் வில்லனாக நடிப்பதற்காக கூட இருக்கலாம்.

மேலும் இப்படத்தில் மற்றொரு வில்லனாக அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது குறித்து காஜல் அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.