Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேவதையை பெற்றெடுத்த பிரசன்னா-சினேகா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகள் என்பது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான். அந்த வகையில் அஜீத் ஷாலினிக்கு பிறகு மிகவும் பிரபலமானவர்கள் சினேகா-பிரசன்னா ஜோடி.
இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சினேகா-பிரசன்னா ஜோடிக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஒரு மகன் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சினேகா சினிமாவில் நடித்து வருகிறார்.
அதேபோல் பிரசன்னாவும் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நல்லதொரு நாயகனாக வலம் வந்திருக்கிறார். இவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெண் பிள்ளை பிறந்தது இவர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
அதை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தேவதை வந்து விட்டாள் என பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— Prasanna (@Prasanna_actor) January 24, 2020
குறிப்பிட்ட சில நாட்களாக வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்கிறார் என்ற செய்தி பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
