Dhanush-Prasanna

பொதுவாகவே சினிமாக்காரர்கள் மத்தியில் தனுஷ் மீது செம காண்டு இருக்கு. அவரது வளர்ச்சியையும் இப்ப இருக்கிற பொசிஷனையும் சிலரால் ஜீரணிச்சுக்கவே முடியறதில்ல. நானும் அவர் மீது கொஞ்சம் காண்டா இருந்தது உண்மைதான். அவர் எனக்கு போன் பண்ணி இப்படியொரு கேரக்டர் இருக்கு. பண்றீங்களா? என்று கேட்டப்ப, சற்று தெனாவெட்டாதான் இருந்தேன். ஆனால் என் மனைவி சினேகாதான் உங்களுக்கு மெனக்கெட்டு போன் பண்ணி ஒரு கேரக்டர்ல நடிக்க கூப்பிடுறாங்க. போய் என்னன்னுதான் கேட்டுட்டு வாங்களேன்னாங்க. அதற்கப்புறம் வந்துதான் தனுஷை நேரில் சந்தித்தேன். நிஜமாகவே அற்புதமான கேரக்டர் அவர் என்றார் பொய்யே கலக்காமல்.

பவர் பாண்டி படத்தின் செகன்ட் பார்ட்டும் தயாராகி வருகிறது. அதிலும் பிரசன்னா இருக்கிற அளவுக்கு பிரண்ட்ஷிப்பை திக் ஆக்கிக் கொண்டார்களாம் இருவரும்.